பீட்ரூட் ஹல்வா Beetroot Halwa Recipe in Tamil

 பீட்ரூட் ஹல்வா | Beetroot Halwa Recipe in Tamil


தேவையான பொருட்கள்

பீட்ரூட் - 3
பால் - 2 கப்
கோவா - 3 தேக்கரண்டி
சர்க்கரை - 1/2 கப்
ஏலக்காய் தூள் - 1/2 தேக்கரண்டி
முந்திரி பருப்பு
நெய்

#பீட்ரூட்ஹல்வா #BeetrootHalwa #HalwaRecipes

செய்முறை

1. பீட்ரூட் ஹல்வா செய்வதற்கு ஒரு கடாயில் நெய் ஊற்றி சூடேற்றிய பின்பு அதில் துருவிய பீட்ரூட் சேர்த்து நன்கு வதக்கி கடாயை மூடி பத்து நிமிடம் வேகவைக்கவும்

2. பத்து நிமிடம் கழித்து வேகவைத்த பீட்ரூட்டில் பால் மற்றும் இனிப்பில்லாத கோவா சேர்த்து நன்கு கலந்து பதினைந்து நிமிடம் மிதமான தீயில் வதக்கவும்

3. பதினைந்து நிமிடம் கழித்து இதில் சர்க்கரை மற்றும் ஏலக்காய் தூள் சேர்த்து பால் வற்றும் வரை கிளறவும்

4. இறுதியாக இதில் நெய் மற்றும் நெயில் வறுத்த முந்திரி பருப்புகளை சேர்த்து ஹல்வா பதம் வரும் குறைவான தீயில் கிளறவும்

5. சுவையான மற்றும் எளிமையான பீட்ரூட் ஹாலேவா தயார்

Comments

Popular posts from this blog

5 Inspiring Food Blog Examples For 2024

Top 5 Traditional South Indian Dishes Everyone Should Taste at Least Once in Their Lifetime for Authentic Flavor

Top Food and Cooking Trends in 2025: AI Diets, Climate-Conscious Cooking, Zero-Waste Kitchens, and Fusion Flavors