Posts

Showing posts from December, 2024

எல்லா வயதினரும் விரும்பி சாப்பிட வேண்டிய பழம்... இனி இதை மிஸ் பண்ணவே மாட்டீங்க..!

Image
  சீத்தாப்பழம் அதிகம் சாகுபடி ஆகக்கூடிய இடம் தென்னிந்தியா. இதன் உயரம் சுமார் 4.5மீ வரை வளரும். சீத்தாப்பழத்தின் சீசன் ஆகஸ்ட் மாதம் முதல் நவம்பர் மாதம் வரை இருக்கும். சீத்தாப்பழத்தின் விதையில் இருந்து எடுக்கப்படும் எண்ணெய்  பூச்சி கொல்லியாக பயன்படுத்தப்படுகிறது. இதன் நிறம் பச்சையும் மஞ்சளும் கலந்த நேரத்தில் இருக்கும். இதற்குள் விதைகள் அதிகம் இருக்கும். விதைகள் மேல் வெள்ளை நிறத்தில் தசை இருக்கும் அதை மட்டுமே நம்மால் உண்ண முடியும். சீதாப்பழம் குழந்தைகளுக்கு பால் குடியை மறக்க உதவுகிறது. அதாவது, இப்பழத்தின் தசையை உணவுடன் சேர்த்து குழந்தைகளுக்கு ஊட்டினால் போதும். சீதாப்பழத்தை சாப்பிட்டால் ரத்தப் பெருக்கமும் புத்துணர்ச்சியும் ஏற்படும். இதில் இரும்புச் சத்து அதிகமாக உள்ளது. நீரிழிவு மற்றும் மாரடைப்பு நோயை தடுக்கும். சீதாப்பழத்தில் வைட்டமின் சி இருப்பதால் கால்சியம் நமக்கு கிடைக்கிறது.  இப்பழத்தை சாப்பிட்டு வருவதால் கண் பார்வை குறைபாடுகள் நீங்கும். உடலில் உள்ள நச்சுப் பொருட்கள் வெளியேறும். ஆகவே பல்வேறு நன்மைகளை தரக்கூடிய சீத்தாப்பழத்தை எல்லா வயதினரும் விரும்பி சாப்பிடலாம். "This Co...

இல்லத்தரசிகளுக்கான யாரும் சொல்லாத சூப்பரான சமையல் குறிப்புகள்!!

Image
  Cooking Tips :  இன்றைய கட்டுரையில் உங்களுக்காக சில பயனுள்ள சமையல் குறிப்புகள் இங்கே கொடுக்கப்பட்டுள்ளது. சமையல் என்பது முழு மனதுடன் செய்யக்கூடிய ஒரு அருமையான கலை. எவ்வளவு கடினமாக முயற்சி செய்தாலும் கூட சில சமயங்களில் எதிர்பார்த்த அளவிற்கு உணவின் சுவை இருக்காது. ஆனால், சில நுணுக்கங்களை மட்டும் அறிந்தால் போதும் உங்கள் சமையலை மிகவும் சிறப்பாக்கி விடும். அந்த வகையில், இன்றைய கட்டுரையில் உங்களுக்காக சில பயனுள்ள சமையல் குறிப்புகள் இங்கே கொடுக்கப்பட்டுள்ளது. அவற்றை நீங்கள் பின்பற்றினால் கண்டிப்பாக உங்கள் சமையலை  சுவையாக மாற்ற முடியும். அவை.. பயனுள்ள சமையல் குறிப்புகள்: டீ போடும்போது எலுமிச்சை பழம் அல்லது ஆரஞ்சு பழத்தின் தோலை சிறிதளவு அதில் சீவி போட்டால், மணமாகவும், குடிப்பதற்கும் ருசியாகவும் இருக்கும். குருமா செய்யும் போது பிற மசாலா பொருட்களுடன் தக்காளி மற்றும் சிறிதளவு முந்திரி பருப்பு சேர்த்து அரைத்து அவற்றை குருமாவில் சேர்த்தால் குருமா சாப்பிடுவதற்கு ருசியாக இருக்கும். அதுபோல கொத்தமல்லி புதினா துவையலாரும் செய்யும்போது அதில் தண்ணீருக்கு பதிலாக சிறிதளவு தயிர் சேர்த்து அரைத்தா...